[X] Close

'96' பட வெளியீட்டு விவகாரம்: விஜய்சேதுபதி கொடுத்த பணத்தை திரும்ப அளிக்க விஷால் முடிவு


vishal-returns-vijaysethupathi-money-in-96-issue

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 15:41 pm
  • அ+ அ-

'96' பட வெளியீட்டு சிக்கலில், விஜய்சேதுபதி அளித்த 1.50 கோடி பணத்தை திரும்ப அளிக்க விஷால் முடிவு செய்திருக்கிறார்.

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. நேற்று (அக்.4) காலை திட்டமிட்டப்படி '96' வெளியாகாமல் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது.

காலை காட்சிக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடனே திரும்பினார்கள். 9 மணிக்கு மேல் தான் தமிழகம் முழுக்க இப்படம் வெளியானது. பைனான்ஸ் சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமார் 4 கோடி ரூபாய் விட்டுக் கொடுத்து உதவி செய்து, பட வெளியீட்டை உறுதி செய்தார் விஜய்சேதுபதி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.

'96' பிரச்சினைக்குக் காரணம் விஷால் தான் என்று தகவல் பரவியது. விஜய்சேதுபதி முன்வைத்து கொடுத்தது விஷாலுக்கு தான் என்று தெரிவித்தார்கள். இதனால், சில தயாரிப்பாளர்கள் விஷால் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில், இப்பிரச்சினைத் தொடர்பாக விஷால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி தொகையை பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது .

அந்தத் தொகையை  தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தறுவதாக கூறியதால் நேற்று  பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்த தொகையை தருவதாக கூறியபிறகு பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது.

விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளை சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை நடிகர் விஜய்சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய்சேதுபதி கொடுப்பதாக கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையை தர வேண்டாம். அதுக்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார். 

நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷால் நந்தகோபாலிடமே பெற்றுக்கொள்கிறார்.  அதுவரைக்கும் அந்த தொகைக்கு விஷாலே வட்டியும் கட்டுவார். ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய்சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். 

மேலும், இந்த பிரச்சினையிலிருந்து விஜய்சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே  வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்று விஷால் தரப்பு தெரிவித்திருக்கிறது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close