[X] Close

பட வெளியீட்டு சிக்கலுக்கு எஸ்.ஆர்.பிரபு முன்வைக்கும் 6 காரணங்கள்


srprabhu-reveals-why-film-releases-halted

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 14:47 pm
  • அ+ அ-

பட வெளியீட்டில் ஏற்படும் சிக்கலுக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘96’. நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. நேற்று (அக்.4) காலை திட்டமிட்டப்படி '96' வெளியாகாமல் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது.

காலை காட்சிக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடனே திரும்பினார்கள். 9 மணிக்கு மேல் தான் தமிழகம் முழுக்க இப்படம் வெளியானது. பைனான்ஸ் சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமார் 4 கோடி ரூபாய் விட்டுக் கொடுத்து உதவி செய்து, பட வெளியீட்டை உறுதி செய்தார் விஜய்சேதுபதி. இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.

இப்பிரச்சினைக்கு விஷால் தான் காரணம் என்றொரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் உலவி வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சினைத் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருநாள் யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவர் மீண்டெழ முயல்வார் இன்னொருவார் வாழ விரும்புவார். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் நாடகத்தை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த பிரச்சினைக்கான காரணிகளை பட்டியலிட்டுள்ளார் எஸ்.ஆர்.பிரபு. தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

*வர்த்தக பார்வையுடன் சில விஷயங்களில் இருந்து ஒதுங்கி நிற்கத் தவறுதல் 

*ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகுமா என்பதே உறுதியற்றதாக இருக்கும்போது அந்தப் படத்துக்கு சூப்பர் ஹிட் பிசினஸ் நோக்குடன் பட்ஜெட் திட்டமிடுதல்.  

* முக்கிய வேடங்களில் நடிப்பவர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 20% மேல் சம்பளமாக வழங்க ஒப்புதல் அளித்தல்

* தவறான தயாரிப்பு முறைகளால் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை இழத்தல்  

* அதீத வட்டிகள் மற்றும் கதையைத் தாண்டியும் விளம்பரத்தை அதிகமாக நம்புதல்

* அநாவசிய நிர்வாக செலவினங்கள். ஒழுங்கின்மை.  

இவைதான் பட ரிலீஸுக்கான முக்கியமான பிரச்சினைகள். தயாரிப்பாளர்கள் நான் மேற்கூரிய பிரச்சினைகளில்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதில் இல்லை.

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close