[X] Close

ஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம்!    - வையாபுரி


iswaraya-yashika-vaiyapuri

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 11:54 am
  • அ+ அ-

வி.ராம்ஜி       

எனக்கு ஐஸ்வர்யா மேலயும் யாஷிகா மேலயும் செம கோபம் இருந்துச்சு. அவங்களோட டிரஸ் போட்டுக்கற விதமும் ஆவேசமும் பார்த்து ரொம்பவே கோபமானேன் என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.

    நடிகரும் பிக்பாஸ் 1ல் வீட்டில் இருந்தவர்களில் ஒருவருமான வையாபுரி, தனியார் யு டியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.

    அதில் அவர் பேசும்போது,

    பிக்பாஸ் 2 வீட்டைப் பாக்கும் போது ஐஸ்வர்யா மேலயும் செம கோபம் வந்துச்சு. அவங்க போட்டுக்கற டிரஸ்ஸைப் பாத்து கோபமாயிட்டேன். என்னடா இது ஒரு பண்பாடு வேணாமா? நாகரீகம்ங்கற பேர்ல் இப்படிலாம் டிரஸ் பண்ணிக்கிறாங்களேன்னு செம டென்ஷனானேன்.

   நான் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போனேன்னா, யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் ரெண்டு அறைவிட்டு, என்னம்மா இப்படிலாம் டிரஸ் பண்றீங்க, ஏன் இதுமாதிரிலாம் நடந்துக்கறீங்கன்னு கேப்பேன்னு ஒரு பேட்டில கூட சொல்லியிருந்தேன்.

    ஏன்னா, பிக்பாஸை அவ்ளோ பேர் பாத்துக்கிட்டிருக்காங்க. ஒரு தெருவுல அம்பது வீடு இருக்குனா, அம்பது வீட்லயும் பிக்பாஸ்தான் பாத்தாங்க. பிக்பாஸ் 1ல யார்லாம் இருக்காங்கன்னு, 15 வயசுப் பொண்ணு வரிசையா சொன்னுச்சு. அந்த அளவுக்கு பிக்பாஸை எல்லாரும் நேசிக்கிறாங்க. பாக்கறாங்கன்னும் போது, இவங்க இப்படி அரைகுறை டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டிருக்காங்களேன்னு டென்ஷன்.

    ஆனா, பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போனப்ப, ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் பாத்துப் பேசினேன். அப்பதான் அவங்களோட இன்னொரு முகம் தெரிஞ்சிச்சு. அவங்க வாழ்க்கைல ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க. எத்தனையோ வேதனகளையெல்லாம் தாங்கிட்டிருக்காங்க. இந்த வலிகள், வேதனைகள், காயங்கள்னு பலதையும் அனுபவிச்சிருக்காங்க.

    ஒவ்வொருவரும் வளர்ற விதம்னு ஒண்ணு இருக்குமில்லையா. அதனால அவங்க அப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சதும் அவங்க மேல இருந்த கோபமெல்லாம் போயிருச்சு. அவங்க மேல ஒரு பரிதாபமும் அன்பும்தான் ஏற்பட்டுச்சு என்றார் வையாபுரி.

   

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close