[X] Close

’சர்கார்’ படக்குழுவினருக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை


murugadoss-warning

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 11:38 am
  • அ+ அ-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சர்கார்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தீபாவளி வெளியீடு என்பதால், படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை திட்டமிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தில் நடித்த ஜூனியர் நடிகர்கள் பலரும் இப்படம் குறித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள். சன் பிக்சர்ஸ் படம் என்பதால் பெரும்பாலும், அந்நிறுவனத்தின் தொலைக்காட்சியிலேயே அனைத்தும் இடம்பெறும். பேட்டி அளித்தது தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “”சர்கார் படக்குழுவினர் கவனத்துக்கு.. சர்கார் படம் உருவாக பலரும் தங்களது கடின உழைப்பைச் செலுத்தியுள்ளனர்.  இருந்தாலும், சில ஜூனியர் ஆர்டிஸ்டுகள் பல பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். இது நியாயமல்ல. எதிர்காலத்தில் எங்கள் அனுமதி இல்லாமல் படம் குறித்து பேட்டியளிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஏ.ஆர்.முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close