[X] Close

காசுக்காக எல்லாத்தையும் செய்தியாக்காதீர்கள்- விஜய் தேவரகொண்டா விளாசல்


vijay-devaragonda-on-media

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 10:09 am
  • அ+ அ-

செய்தி ஊடகமும் ஒருவித தொழில் என்பது எனக்குப் புரிகிறது ஆனால் காசுக்காக எல்லாத்தையுமே செய்தியாக்கக் கூடாது என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்திருக்கிறார்.

கன்னட நடிகை ராஷ்மிகா விவகாரம் குறித்த கேள்விக்குத்தான் அவர் இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

''ராஷ்மிகா விவகாரத்தில் நான் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள். நமது பொழுதுபோக்குக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வது தவறு. உங்களுக்கு அவர்களைத் தெரியாது. எனக்கு இருவரையுமே தனிப்பட்ட முறையில் தெரியும். அவர்கள் இருவரும் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக்குத் தெரியும். செய்தி என்பது தொழில். இதனால் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. மற்றவர்கள் துன்பத்தில் இருந்து பணம் கறக்க முயற்சி செய்யக் கூடாது. 

இதைப் பற்றியெல்லாம் நான் பேசக்கூடாது ஆனால் பேசாமல் இருக்க முடியாது என்பதால் பேசுகிறேன். ரக்‌ஷித்தும் ராஷ்மிகாவும் யாரும்
எதுவும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்பவேண்டாம் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். நாம் அவர்கள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது" என்றார். சற்றும் கோபப் படாமல் மிகவும் நிதானமாக பேசினார் விஜய்.

 

— Rashmikamandannafan (@Geethamadam) October 4, 2018

 

ராஷ்மிகா விவகாரம் என்ன?

கீத கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கும், கன்னட நடிகர் ரக்‌ஷித் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர், நிச்சயதார்த்தமும் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து பல்வேறு செய்திகள், யூகங்கள் அடிப்படையில் வெளியானாலும், நடிகர் ரக்‌ஷித், யாரும் எதுவும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்பவேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தார். ராஷ்மிகாவும் தன் தரப்பை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close