[X] Close

மும்தாஜ் மாதிரி ஒருத்தங்களை பாக்கமுடியாது; மும்தாஜ் எனக்கு அம்மா மாதிரி! – யாஷிகா நெகிழ்ச்சி


yashika-mumtaz

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 08:57 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

மும்தாஜ் மாதிரி நல்லமனசு கொண்ட ஒருத்தங்களைப் பாக்கவே முடியாது. மும்தாஜ் எனக்கு அம்மா மாதிரி என்று யாஷிகா, தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து புகழ்பெற்ற யாஷிகா, தனியார் யு டியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

மும்தாஜ் பற்றி யாருமே சரியாப் புரிஞ்சுக்கவே இல்லை. மும்தாஜ் நடிக்கிறாங்கன்னுதான் எல்லாரும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவங்களோட அன்பை புரிஞ்சிக்காமதான் இப்படி தப்புத்தப்பா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அவ்வளவு ஏன்… மும்தாஜ் மேடத்தை ஆரம்பத்துல நானே கூட தப்பாத்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். எல்லார்க்கிட்டயும் தப்பாவே சொல்லிட்டும் இருந்தேன். மும்தாஜ் மேடம் ஒரு ஃபேக்னு சொன்னாங்க.

ஆனா அவங்களோட நல்ல மனசை அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன். அவங்களைப் போல அன்பு காட்டவே முடியாது. அதுலயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பு காட்றதுதான் பெரியவிஷயம். அப்படியொரு மனசு அவங்களுக்கு.

மும்தாஜ் மேடம் எனக்கு அம்மா மாதிரி. அப்படிப் பாத்துக்கிட்டாங்க. இன்னும் சொல்லணும்னா, எங்க அம்மாவை விட கூடுதலான அக்கறை எடுத்துக்கிட்டு பாத்துக்கிட்டாங்க. எங்கிட்ட மட்டுமில்லாம, எல்லார்கிட்டயுமே அவங்க அப்படித்தான் அன்பா நடந்துக்கிட்டாங்க. அதுக்குக் காரணம் என்னன்னா, அது மும்தாஜ்  மேடத்தோட இயல்பு. இயல்பாவே மும்தாஜ் மேடம் ரொம்ப ரொம்ப அன்பானவங்கதான்.

அவங்களைப் போல அன்பானவங்களை, பிரியமானவங்களை, உண்மையானவங்களை பாக்கவே முடியாது.

இவ்வாறு யாஷிகா தெரிவித்தார்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close