[X] Close

கமலுடன் பிக்பாஸ் வீட்டார் சந்திப்பு! எல்லோருக்கும் செல்போன் பரிசு


kamal-biggboss2-meet

கமலுடன் பிக்பாஸ் டீம்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Oct, 2018 20:13 pm
  • அ+ அ-

பிக்பாஸ் சீசன் 2ல் இருந்தவர்கள் கமலுடன் சந்தித்து உரையாடினர். அப்போது எல்லோருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மேலும் எல்லோருக்கும் செல்போன்களைப் பரிசாக வழங்கினார் கமல்.

பிக்பாஸ் சீசன் 2 -  107வது நாளில் நிறைவடைந்தது. கடைசியாக நிறைவுறும் நாளில், ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா இருந்தனர். இதில் ஜனனி வெளியேற்றப்பட்டார். அதற்கு ஆரவ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, ஜனனியை அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு நிறைவு நாளின் போது, கமலே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஐஸ்வர்யாவுக்கும் ரித்விகாவுக்கும் கமலே காபி போட்டுக்கொடுத்தார். பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர், அரங்குக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.

பிறகு ரித்விகாவை வின்னர் என அறிவித்தார் கமல்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களும் கமல்ஹாசனும் சந்தித்துக்கொண்டனர். இந்த நிகழ்வில், ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக், மஹத், பாலாஜி, சென்றாயன், டேனியல், ரம்யா முதலானோர் கலந்துகொண்டு கமலுடன் உரையாடினார்கள்.

நிகழ்வின் போது, சிறப்பு விருந்தோம்பலும் நடந்தது. மேலும் பிக்பாஸ் ஸ்பான்ஸர்களின் முக்கிய ஸ்பான்ஸரான நிறுவனத்தின் செல்போன்களை கமல் எல்லோருக்கும் வழங்கினார்.

பலரும் கமலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தங்கள் நெகிழ்வைப் பதிவு செய்தார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close