[X] Close

விஜய் தேவரகொண்டாவுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் பாராட்டு: ‘நோட்டா’ படக்குழு மகிழ்ச்சி


harbhajan-tweet-about-vijay-devarakonda

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 19:59 pm
  • அ+ அ-

விஜய் தேவரகொண்டா வாழ்த்து தெரிவித்து ஹர்பஜன் சிங் தமிழில் பாராட்டு தெரிவித்திருப்பதால் ‘நோட்டா’ படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோட்டா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகியுள்ளது. 

தெலுங்கில் முன்னணி ஹீரோவான விஜய் தேவரகொண்டா, தமிழ் பேசி நடித்திருக்கிறார். இப்படத்தை விளம்பரப்படுத்த Put Chutney யூ-டியூப் குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு Put Chutney குழுவினர் தமிழ் கற்றுக் கொடுப்பது போல் அந்த வீடியோ அமைந்திருக்கிறது.

இந்த வீடியோ பதிவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம்   உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

ஹர்பஜன் சிங் ட்வீட்டிற்கு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் “ஹர்பஜன் சிங் புலவரே.. கோடான கோடி நன்றிகள் ஐயா. கோடான கோடி நன்றிகள்!! ‘நோட்டா’ படத்த பாக்க நாங்கெல்லாம் வெயிட்டிங். காலை 5 மணி காட்சிக்கு வந்துடுங்க” என்று தெரிவித்திருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடத் தொடங்கியதில் இருந்தே, அவ்வப்போது ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close