[X] Close

விஜய்யின் ’நண்பி’ சர்ச்சை - முற்றுப்புள்ளி வைத்த பா.விஜய்


vijay-nanbi-speech

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 16:56 pm
  • அ+ அ-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள்.

இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில் விழாவில் பேசிய விஜய், தன் ரசிகர்களை பார்த்து நண்பா, நண்பி என குறிப்பிட்டார். அதில் நண்பி என்ற வார்த்தை சரியானதா என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்த விமர்சனத்திற்கு பாடலாசிரியர் பா. விஜய் விளக்கமளித்துள்ளார். 

பா.விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் 

”திரை உலகின் தளபதி விஜய் அவர்கள் சொன்ன நண்பி என்ற சொல், தமிழ் இலக்கிய பயன்பாட்டுச் சொல்தான். தமிழ் எழுத்துக்களின் கூட்டில் புதிய வார்த்தை உத்திகளின் வடிவமைப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை” 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close