[X] Close

விளம்பரப்படுத்த வித்தியாச முயற்சி: '96' படக்குழுவுக்கு கைகொடுத்த #96SchoolGroupPicChallenge


96-school-pic-challenge

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Oct, 2018 16:42 pm
  • அ+ அ-

ட்விட்டர் ஃபேஸ்புக் முழுவதும் '96 வாட் ஏ ஃபீல்'!தான். ஜெஸ்ஸிக்கு அப்புறம் ஜானுவாம்.. கொண்டாடுகிறார்கள் 90-களின் குழந்தைகள்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் 96. இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. 

ரசிகர்கள் ஆஹா ஓஹோ எனப் புகழ்கின்றனர். வின்னைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸிக்கு அப்புறம் 96 ஜானுதான் என உருகி உருகி பேசுகிறார்கள்.
ஆட்டோகிராஃப், பிரேமம் படத்தைத் தாண்டியும் வேற லெவல் என்கிறார்கள். ஒரு பெண்ணின் மனதை முழுதாக வெளிப்படுத்தியிருக்கிறது என சிலாகிக்கிறார்கள்.

நாஸ்டால்ஜிக், வாட் ஏ ஃபீல் என ஆங்கில புகழாரங்களும் இருக்கின்றன. காதலே காதலே பாடலைச் சொல்லி கசிந்து உருகுகிறார்கள்.
நாங்கள் 90-s கிட்ஸ் என மார்தட்டிக் கொள்கிறார்கள்.

#96SchoolGroupPicChallenge என்ற சேலஞ்சை நடிகர் விஜய் சேதுபதி தொடக்கி வைத்தார். அதில் அவர் 10-வது படிக்கும்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

சினிமாவில், இப்போதெல்லாம் டீஸர், ட்ரெய்லர் வரிசையில் படத்தை வைத்து ஒரு சேலஞ்ச் விடுவதும் ட்ரெண்டாகிவிட்டது. அண்மையில் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்துக்கு கருப்பி சேலஞ்ச் விடுக்கப்பட்டது. நடிகர் சித்தார்த்தான் இதைத் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், #96SchoolGroupPicChallenge ட்விட்டர், ஃபேஸ்புக்கில் களைகட்டியிருக்கிறது. அதேபோல் #96CelebrationofLove என்ற ஹேஷ்டேகும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆம்பள நாட்டுக்கட்டை என்ற வார்த்தையையும் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விரலுக்கு கீழே விஜய் சேதுபதி..

இன்னும் சிலர் ஷேர் செய்த ஃபோட்டோஸ்..

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close