[X] Close

என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள் - பாக்யராஜ் ஆதங்கம்


bhagyaraj-about-tamil

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 15:14 pm
  • அ+ அ-

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் தயாரிப்பில் நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமணி இயக்கியுள்ளார்.

இப்படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் `ஒளடதம்`  பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்காக பிரமாண்ட  பேனா வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது,

 "தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து  போடுவேன் . காசோகளிலும் கூடத் தமிழில் தான்  கையெழுத்து  போடுவேன் ஆனால் தமிழில் கையெழுத்து  போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா?  நான் சைனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள் அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். 

ஆங்கிலம் பேசும் ஆட்களைத்  தேடிப் பிடிகக வேண்டும். நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில ஒரு தெலுங்குப்படத்தின்  படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது.  என்  பாஸ்போர்ட்டில  சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்.

சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள்"

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close