[X] Close

’தமிழை கோழிக்குஞ்சு போல காப்பாற்ற வேண்டும்’ - இயக்குனர் பேரரசு வேதனை


perarasu-about-tamil

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 15:08 pm
  • அ+ அ-

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் தயாரிப்பில் நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமணி இயக்கியுள்ளார்.

இப்படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் `ஒளடதம்`  பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்காக பிரமாண்ட  பேனா வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு,

”தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை.. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது .தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது . இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள்  என்று கேட்க வேண்டியிருக்கிறது. தமிழில் கையெழுத்து போ டுங்கள் என்று கேட்கிற இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

“இவ்வாறு பேரரசு பேசினார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close