[X] Close

பிக்பாஸ் வீட்டில் சிலரை மிகவும் காயப்படுத்தியிருக்கிறேன்: ஐஸ்வர்யா ஒப்புதல்


aiswarya-video-twitter

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 13:13 pm
  • அ+ அ-

விஜய் டிவியில் 107 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா இருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஐஸ்வர்யாவின் செயல்பாடுகள், சமூகவலைத்தளத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், பிக் பாஸ் முடிந்துவிட்டதால் ஐஸ்வர்யா மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

வணக்கம் நான் உங்கள் பிக்பாஸ் ஐஸ்வர்யா. எனக்கு நிஜமாக என்ன சொல்வதென்று தெரியவில்லை. உலகம் முழுவதிலிருந்தும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைத்து மக்களுக்கும் நான் எப்போதும் நன்றியுடைவளாக இருப்பேன். நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை. பிக்பாஸ் வீட்டில் சிலரை மிகவும் காயப்படுத்தியிருக்கிறேன். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் உள்நோக்கத்தோடு அப்படி செய்யவில்லை. 

— Aishwarya Dutta (@AishwaryaaDutta) October 3, 2018

பிக்பாஸ், விஜய் டிவி, உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. விரைவில் பெரிய திரையில் சந்திக்கலாம். கடந்த 6 வருடங்களில் தமிழ்நாட்டில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் பிக்பாஸ் செல்வேன் இவ்வளவு அன்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி

இவ்வாறு அந்த வீடியோவில் ஐஸ்வர்யா பேசியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close