[X] Close

சர்கார் ஆடியோ லான்ச் ஐடியா கலாநிதி மாறன் சொன்னது!- செம்பியன்


it-was-kalanithi-maran-sir-s-idea

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Oct, 2018 12:37 pm
  • அ+ அ-

சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா முதன்முறையாக டிஜிட்டல் முறையில் ரசிகர்களே வெளியிடும் வகையில் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து சன் டிவியின் சி.ஓ.ஓ., செம்பியன் தனது ட்விட்டரில், "சர்கார் இசை வெளியீட்டு விழாவை சூப்பர் ஹிட் ஆக்கிய அனைவருக்கும் நன்றி. எல்லோருமே, சர்கார் இசையை ரசிகர்களே வெளியிடும்படி செய்தது யாருடைய ஐடியா என்று கேட்டனர். இது கலாநிதி மாறன் சார் ஐடியா.

அவர்தான், விஐபி.,க்களை வைத்து ஆடியோ லான்ச் செய்வதற்குப் பதிலாக நாம் ஏன் டிஜிட்டல் முறையில் விசிறிகள், பார்வையாளர்களைக் கொண்டே வித்தியாசமாக செய்யக் கூடாது என்றார். இந்தியாவிலேயே  இப்படி ஆடியோ லான்ச் செய்யப்பட்டிருப்பது  இதுதான் முதல்முறை" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close