[X] Close

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சசிக்குமார்!


sasikumar-in-petta

  • kamadenu
  • Posted: 04 Oct, 2018 12:16 pm
  • அ+ அ-

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் சசிகுமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார்.  அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாராணாசியில் ரஜினி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் சசிகுமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், என பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இப்படத்தில் சசிகுமாரும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close