[X] Close

விஷால் தொகுத்து வழங்கப்போகும் டிவி நிகழ்ச்சி இதுதான்!


vishal-tv-show

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Oct, 2018 12:15 pm
  • அ+ அ-

சன் டிவியில் அடிக்கடி விஷால் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவதாக புரோமோக்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், அது என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது.

'சன் நாம் ஒருவர்' என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர். இது குறித்து விஷால் தனது ட்விட்டரில், "நாம் அனைவரும் பிறர் மீதும் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சிதான் இது.

சன் நாம் ஒருவர். இந்த நிகழ்ச்சி, அன்புக்காக காத்திருப்பவர்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி. இது வெறும் நிகழ்ச்சியல்ல ஒரு முயற்சி. உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் புரோமோவிலிருந்து கார்த்தியும் இதில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. 

 

 

இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து சொல்லி நடிகை குஷ்பு ட்வீட் செய்திருக்கிறார். விஷால், கார்த்தி என இருவருக்குமே குஷ்பு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

 

விஷால் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் கார்த்தி, "மச்சி, இது பெரிய முயற்சி. ஒரு சகோதரனுக்கு உதவ பல நல்ல உள்ளங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது கதையல்ல நிஜம், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சிகளில் வந்திருக்கின்றன. இது அந்த வரிசையில் ஒரு பரினாம வளர்ச்சி என்று கூறலாம். வாழ்க்கையில் சிரமப்படுபவர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close