[X] Close

மஹத்துக்கு குழப்பமும் பயமும் உண்டு; அப்போ லவ் பண்ணினோம், இப்ப இல்ல! – ’ஹானஸ்ட்’ யாஷிகா


yashika-open-talk-mahath

யாஷிகா - மஹத்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 19:23 pm
  • அ+ அ-

மஹத்துக்கு எப்பவுமே குழப்பமும் பயமும் இருந்துக்கிட்டே இருக்கும். அப்ப லவ் பண்ணினோ. ஆனா இப்ப இல்ல. இதனால எனக்கு எந்த வருத்தமும் இல்ல என்று உண்மையும் தெளிவுமாகப் பதில் அளித்தார் யாஷிகா. 

தனியார் யு டியூப் சேனலுக்கு யாஷிகா பேட்டி அளித்தார்.

அந்தப் பேட்டியில் மஹத் மீதான் காதல் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு யாஷிகா அளித்த பதில் வருமாறு:

மஹத் நல்லா ஃப்ரெண்ட்லியாத்தான் பழகிட்டிருந்தான். பேசப்பேச பிடிச்சிருந்துச்சு. அவனுக்கும் என்னைப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, ஒருவிஷயம்… மஹத்துக்கிட்ட ஹானஸ்ட் இல்ல. நேர்மை கிடையாது. மியூச்சுவலா பேசினோ. புரிஞ்சுக்கிட்டோம். என்னோட லவ்வையும் ஏத்துக்கிட்டான்.

எனக்கும் தெரியும். அப்பா, அம்மாவைக் காயப்படுத்திடக்கூடாது. அதுலயும் நான் தெளிவாத்தான் இருந்தேன். அதேபோல, மத்தவங்களோட குறைகளைச் சுட்டிக்காட்டிச் சொல்லணும்னா, முதல்ல நாம சரியா இருக்கணும். அதை சின்னவயசிலிருந்தே உணர்ந்திருக்கேன். அதன்படிதான் நடந்துக்கிட்டு வரேன்.

இன்னொரு விஷயமும் யோசிப்பேன். தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிடுறது சகஜம்தான். ஆனால் அந்தத் தப்பை மறைக்கறதோ, தப்பே பண்ணலைன்னு சொல்றதோ, ரொம்பவே தப்பு. அப்புறம் ஹானஸ்ட்டா இருக்கறதே அடிபட்டுப் போயிரும்.

மஹத்துக்கு ஏற்கெனவே கேர்ள்ஃபிரண்ட் (பிராச்சி) இருக்கறது தெரியும். அப்படியிருந்தும்தான் எங்கிட்ட லவ்வைச் சொன்னான். திடீர்திடீர்னு ஒரு குழப்பம் மஹத்துக்கு வந்துச்சு. ஒரு பயம் வந்துச்சு. பிராச்சி ஸ்வீட் கேர்ள். நல்ல பொண்ணு. மஹத் வெளியே வரும்போது அங்கே ஒரு உயிர் காத்துக்கிட்டிருக்கு. அதை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுச்சு. சரி… ஓகே… விலகிடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். எப்பவும் போல ஃப்ரெண்டாவே இருந்துடுவோம்னு தெளிவா இருந்துட்டேன்.

அப்போ நடந்த விஷயங்களை, வெளியே எல்லாரும் திட்டித்திட்டி ஸ்டேட்டஸ் போட்டாங்க. கழுவிக்கழுவி ஊத்துனாங்க. அதெல்லாத்தையும் நிதானத்தோட ஏத்துக்கற தெளிவும் பக்குவமும் வந்துருக்கு இப்போ!

ஹரீஷ் வந்தப்போ, ஒரு டாஸ்க். அப்ப கையில இருக்கற யெஸ், நோ போர்டை காட்டணும். எல்லாரும் யெஸ்னு சொன்னப்போ, மஹத் மட்டும் நோ போர்டு காட்டினான். அது, எனக்கு மட்டுமில்ல. எல்லாருக்குமே அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. இன்னொரு விஷயம்… அந்த டாஸ்க் நடக்கறதுக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னாடிதான், லவ்யூன்னு சொன்னான். ஆனா எல்லாருக்கு முன்னாடியும் நோ அப்படீங்கறான். அப்போ கொஞ்சம் உடைஞ்சு போனது என்னவோ உண்மைதான். நான் பொதுவாவே சட்டுன்னு அழமாட்டேன். இத்தனைக்கும் உணர்ச்சிவசப்படுறவதான் நான். அழுகேயே வராது எனக்கு. ஆனா பிக்பாஸ் வீட்ல சில தடவை அழுதுருக்கேன்.

மஹத்துக்கு எப்பவுமே ஒரு பயம் இருக்கு. குழப்பம் இருக்கு. அவங்க என்ன சொல்லுவாங்க, இவங்க என்ன சொல்லுவாங்க, வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு பயமும் குழப்பமுமா இருப்பான். என்ன சொன்னாலும், மஹத்துக்காக ஒரு பொண்ணு, வெளியே காத்துக்கிட்டிருக்கா. அதான் சரி. எனக்கு இப்போ இந்த நிமிஷம், எந்த வருத்தமும் இல்ல என்றார் யாஷிகா.

ஒருவேளை, பிராச்சி இல்லையெனில், மஹத் உங்களைக் காதலிப்பதில் உறுதியாக இருந்திருப்பாரா என்ற கேள்விக்கு, தெரியல. இருக்கலாம். ஆனா எதுக்கு அதெல்லாம்..’ என்று தோள் குலுக்கிச் சிரிக்கிறார் யாஷிகா.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close