[X] Close

”இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” - ’ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்’ கரண் நெகிழ்ச்சி பேட்டி


karan-interview-shrooov

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 15:02 pm
  • அ+ அ-

நீண்ட நாட்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் கரண். தற்போது மீண்டும் பிரபலமாகியிருக்கிறார். 

சமீபகாலமாக ட்விட்டர் பேஸ்புக்கில் எங்கு சென்றாலும் கரண் பற்றிய பேச்சுதான். கரணிசம், கரண் ஆர்மி, அடங்காத கரண் ரசிகர்கள், முரட்டு கரணியன்ஸ் என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கரண்.

கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் வரும் கரணின் பின்னனி இசையான ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ் என்ற வார்த்தைகளோடு கரணின் படம் இல்லாத பின்னூட்டங்களே இல்லை எனலாம். 

இந்த திடீர் புகழ் குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கரண், ”ரசிகர்களின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் சமூக வலைதளங்களில் இல்லை. என் மனைவிதான் ட்விட்டரில் என்னை பற்றி வரும் அனைத்தையும் பற்றி எனக்கு சொல்கிறார்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சினிமாவிலிருந்து ஒதுங்கி இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கவே வியப்பாக உள்ளது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

நான் இவற்றையெல்லாம் முதலில் விளையாட்டாக நினைத்தேன். பின்புதான் அவர்கள் உண்மையாகவே என்னை பற்றி ட்விட்டரில் பதிவிடுகிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்தவர்கள் ‘கரண்.. கரண்’ என்று ஆர்ப்பரித்தார்கள். என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். தியேட்டருக்குள் செல்லவே 20 நிமிடம் தாமதமாகி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

நான் ரசிகர்களுக்காக நல்ல படங்களில் நடிப்பேன். அவர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்றுவேன். ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.

கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல். மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பது போல படங்கள் நடிக்க வேண்டும் என்று அவர்தான் எனக்கு அறிவுரை கூறினார். என்னுடைய அடுத்த படம் அப்படிப்பட்ட படமாக இருக்கும்.

முதலில் வில்லனாக நடித்து பின்பு ஹீரோவாக ஆனேன். அதன் பிறகு குணசித்திர வேடங்களிலும் நடித்தேன். இப்போது மக்களின் ஆதரவுடன் இன்னொரு ரவுண்டு வருவேன்.” என்று கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close