அப்பா அரசியலிலும் ஜெயிப்பார்! : ஸ்ருதிஹாசன்

சினிமாவில் சாதித்தது போலவே அப்பா அரசியலிலும் சாதிப்பார் என நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியின் 'மெகா ஐகான்' (MegaIcon) என்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஏன் சகலகலாவல்லவனாக இருக்கிறார் எப்படி அவரால் சகலகலாவல்லவராக உருவாக முடிந்தது என்பதை அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் அரசியல் கனவு குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், "சினிமாவில் அப்பா தனக்குக் கிடைத்த பாராட்டுகளைக் கொண்டாடினார். மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டார். இதுதான் விதி என்றால் அதை எதிர்த்து துணிந்து நின்று கேள்வி கேட்பார்.
சினிமாவில் அவர் கொண்ட இந்த குணங்களைத்தான் அரசியலிலும் பிரதிபலிக்கிறார். அரசியலில் அவர் தீவிரமாக இருகிறார். சினிமாவில் அவர் கொண்ட பக்கவாட்டுச் சிந்தனையைத்தான் அரசியலிலும் கொண்டிருக்கிறார். அதில் அவர் நேர்மையாக இருக்கிறார்" என்றார்.