[X] Close

என் ரசிகர்களுக்காக ஒரு லாஜிக் : கமல்ஹாசன்


i-dont-want-them-to-be-a-tool-for-my-self-progress-kamal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Oct, 2018 13:20 pm
  • அ+ அ-

எனது ரசிகர்கள் என் சுய முன்னேற்றத்துக்கான கருவிகள் அல்ல அவர்கள் சமூகத்துக்குப் பயனுள்ளவர்கள் என நடிகர் கமல் கூறியுள்ளார்.

பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் 'மெகா ஐகான்' என்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் ஏன் சகலகலாவல்லவனாக இருக்கிறார் எப்படி சகலகலாவல்லவனாக உருவாக முடிந்தது என்பதை அறிவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தனது ரசிகர்களை ஏன் சமூகப் பணியில் கவனம் செலுத்தக் கூறினார் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல் விளக்கம் அளித்தார். 

"நான் திரைப்படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்கிறேன். அதற்கு நீங்கள் பணம் கொடுக்கிறீர்கள். அதற்கும் மேலே எதற்கு இந்த வழிபாடு? உங்களுக்கு அதில்தான் திருப்தி என்றால் என்னைத் துதிப்பதைவிட என் பெயரைச் சொல்லி சமூக சேவை செய்யுங்கள் என்றேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் என்று சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

இதுதான் எனது ரசிகர்களுக்காக நான் வைத்திருந்த லாஜிக். எனது சுய முன்னேற்றத்துக்கான கருவிகளாக அவர்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர்களை சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என விரும்பினேன். அவர்கள் அனைவரும் இப்போது சமூக சேவை  செய்ய பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்" என்று கமல் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close