[X] Close

’சர்கார்’ இசை வெளியீட்டு விழாவை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: படக்குழு அதிர்ச்சி


sarkar-audio-launch-video-in-tamil-rockers

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 12:58 pm
  • அ+ அ-

’சர்கார்’ இசை வெளியீட்டு விழாவின் மொத்த வீடியோவையும் தமிழ் ராக்கர்ஸ் இணையம் வெளியிட்டிருப்பதால் படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, பழ.கருப்பையா, ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்.2) பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், பல்வேறு புதுமைகள் விழாவில் இருந்தன. மேலும், நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள் வந்த ரசிகர்கள் அனைவருக்குமே இலவச இணையதள வசதி வழங்கப்பட்டது. இதனால், சமூகவலைத்தள பக்கங்களில் நேற்றிரவு ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவே ஆட்கொண்டது. சன் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் ஒட்டுமொத்த விழாவையும் HD பிரிண்ட்டில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுவிட்டார்கள். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

எப்போதுமே புதிய படங்களை மட்டும் போட்டியிட்டு வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையம், முதன் முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவையும் வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களின் இணையத்தை தடை செய்யும்போது, வெவ்வேறு வழியில் தமிழ் ராக்கர்ஸ் தங்களது இணையத்தைப் புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ ஷுட் படங்கள் லீக், பாடல்கள் லீக் என பல்வேறு கட்டங்களைத் தாண்டி இசை வெளியீட்டு விழாவை நடத்தியது சன் பிக்சர்ஸ். தற்போது அந்த விழாவின் மொத்த வீடியோவையும் தமிழ் ராக்கர்ஸ் இணையம் வெளியிட்டுவிட்டது. இதனால், இனி வரும் காலங்கள் 'சர்கார்' படக்குழுவுக்கு மேலும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close