[X] Close

என்னை தினமும் வழிநடத்தும் கமல் சார்! - பிக்பாஸ் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி ட்வீட்


iswarya-kamal-tweet

கமல் - ஐஸ்வர்யா

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 12:38 pm
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டில் சீசன் 2 தொடங்கிய கையுடன், நமக்குப் பிடிக்காமல் போனவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா. இவரின் பேச்சும் கோபமும் கண்டு எல்லோருமே என்ன இந்தப் பொண்ணு என்றுதான் திட்டிக்கொண்டே இருந்தார்கள்.

மும்தாஜைப் புறக்கணித்தார். அன்பு டிராமா போடுறார் என்றார். மிகப்பெரிய வாக்குவாதமெல்லாம் செய்தார். போதாக்குறைக்கு சர்வாதிகாரி டாஸ்க்கும் வந்தது. பாலாஜியை தாறுமாறுதக்காளிச் சோறு என்று புரட்டியெடுத்தார். ஆனானப்பட்ட கோபக்கார பாலாஜியே சுருண்டுதான் போனார்.

இன்னும் இன்னும் என்று பாலாஜி தலையில் குப்பையைக் கொட்டினார். இன்னும் கோபமானார்கள் நேயர்கள். சென்றாயனுடன் தகராறு. டேனியலையும் ஜனனியையும் வறுத்தெடுத்தார்.

ஆனால் ஒருகட்டத்தில், ஐஸ்வர்யாவுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. யாஷிகாவின் புண்ணியத்தில், அவரின் அண்மையில் கொஞ்சம்கொஞ்சமாக மனம் மாறினார். தெளிந்தார். கோபம் குறைத்தார். மும்தாஜ் வெளியேறுவதற்கு முன்னதான வாரத்தில், அவருடன் ஈஷிக்கொண்டார். அவரின் அன்பு, இன்னும் வளமாக்கியது மனதை!

மும்தாஜ் வெளியேறிய போது யாஷிகாவுடன் சேர்ந்து ஐஸ்வர்யாவும் அழுதார். ரொம்பவே வருத்தப்பட்டார். கடைசி இரண்டு வாரங்களில், வேறொரு ஐஸ்வர்யாவாக ஜொலித்தார். மெல்ல மெல்ல மோல்டு செய்யப்பட்டார் ஐஸ்வர்யா.

கடைசி நாள், கடைசி நிமிடம்... பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் இருந்தனர். இருவரையும் கமல் அழைத்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார். இருவரையும் இருபக்கமும் நிற்கவைத்து, கைகோர்த்துக்கொண்டார்.

சட்டென்று ஐஸ்வர்யாவின் கைக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ரித்விகாவின் கையை உயர்த்தி வின்னர் ரித்விகா என்பதை அறிவித்தார்.

அதைக் கண்டு கொஞ்சமும் கோபமில்லை ஐஸ்வர்யாவுக்கு. வருத்தப்படவில்லை. அழவில்லை. இத்தனைக்கும் பிக்பாஸ் 1ல் ஆரவ்வும் சிநேகனும் இருந்தபோது ஆரவ் செலக்ட் செய்யப்பட்ட பிறகு, சினேகன் முகம் வாடிப்போனது என்கிறார்கள் நேயர்கள்.

ஆனால் ஐஸ்வர்யா ரித்விகாவைக் கட்டிக்கொண்டார். வாழ்த்தினார். அது ஆத்மார்த்தமான வாழ்த்து என்பதை நேயர்களால் உணரமுடிந்தது.

இந்தநிலையில், ஐஸ்வர்யா, தன் டிவிட்டர் பக்கத்தில், என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. இதற்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை. இது எனக்கு மிகப்பெரிய விஷயம்.

என் வாழ்வில் நடந்த மிக முக்கியத் தருணம். இந்த பிக்பாஸ் பயணம், என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தினமும் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் கமல் சாருக்கு நன்றி. தமிழ் மக்களுக்கும் நன்றி. இணைந்திருப்போம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close