[X] Close

”கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் ரஜினி” - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாடல்


udayakumar-about-rajini

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 12:11 pm
  • அ+ அ-

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி - கமல் இருவரையும் கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும், அதிமுக அமைச்சர்கள் பலருமே ரஜினி - கமல் இருவரையுமே தாக்கிப் பேசி வருவது குறிப்பிட்டத்தக்கது.

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியின் அரசியல் வருகை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தமிழ் மக்களுக்கு சேவை செய்வதாக ரஜினி அறிவித்து பல ஆண்டுகள் ஓடி விட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவர் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிர்வாகிகளை நியமித்திருப்பது குறித்த செய்திகள் வருகிறது. 

எனவே அவர் கடல் தாண்டி தன் கொள்கையை கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார். மக்களிடம் கொள்கையை சேர்ப்பதில் ரஜினி கடுகளவு கூட வெற்றி பெறவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டம் செல்ல முயல்வதாக மக்கள் நினைக்கிறார்கள்

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close