[X] Close

சிம்புவுடன் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா;


simbu-iewarya-janani-rythvika

சிம்புவுடன் ஜனனி, ரித்விகா

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Oct, 2018 12:01 pm
  • அ+ அ-

சிம்புவுடன் பிக்பாஸ் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா மற்றும் மஹத், ஹரீஷ் ஆகியோர் சேர்ந்து செக்கச்சிவந்தவானம் படத்தைப் பார்த்தனர். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி.

பிக்பாஸ் வீட்டில் மஹத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இருந்தனர். மஹத் பாதியிலேயே வெளியேறினார். ஆனால் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா மூவரும் கடைசி வரை இருந்தார்கள். அதில் கடைசிநாளில், வின்னர் அறிவிப்பதற்கு முதல் நாளில், ஜனனி வெளியேறினார். ஐஸ்வர்யாவும் ரித்விகாவும் மட்டும் இருந்தார்கள். இதில் ரித்விகா வின்னராக வென்றார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த சென்றாயன், வெளியேறிவிட்டு, விருந்தாளியாக உள்ளுக்குள் நுழைந்தார். அப்போது ஐஸ்வர்யாவிடம், ‘எதைப் பத்திக் கவலைப்படாதே ஐஸூ. உனக்கெல்லாம் எவ்ளோ நல்லபேரு தெரியுமா?’ என்று சொல்ல அழுதேவிட்டார் ஐஸ்வர்யா.

அதன் பிறகு, ‘நேத்திக்கி சிம்புவைப்பாத்தேன். உன்னை ரொம்ப விசாரிச்சாரு’ என்று சென்றாயன் சொன்னதும் மகிழ்ந்து போனார் ஐஸ்வர்யா. ‘இன்னொரு விஷயம் சொல்றேன். சிம்பு அடுத்த படம் பண்றாரு. அதுல நீதான் ஹீரோயின். சிம்புவே சொல்லிட்டாரு’ என்று சொல்ல... அவ்வளவுதான். ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனார் ஐஸு.

இதெல்லாம் இருக்க, பிக்பாஸ் முடிந்து எல்லோரும் சகஜநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஜனனி நேற்று டிவிட்டரில் சில படங்களைப் பதிவிட்டுள்ளார்.

சிம்புவுடன் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் நிற்க அவர்களுடன் மஹத், ஹரீஷும் நிற்கின்றனர். எல்லோரும் சேர்ந்து செக்கச்சிவந்த வானம் படம் பார்க்கப் போவதைக் குறிப்பிட்டு ஜனனி, பதிவிட்டுள்ளார்.

செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கேரக்டர் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. ரித்விகா பிக்பாஸ் வின்னராகிவிட்டார். ஜனனிக்கு பிக்பாஸ் மூலம் நல்ல பெயரும் புகழும் கிடைத்துவிட்டது. ஐஸ்வர்யாவுக்கு பெயர், புகழுடன், சிம்புவின் படத்தில் வாய்ப்பும் கிடைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்னு... செக்கச்சிவந்த வானம் சேர்ந்து பார்த்ததுதான், செம வைரல் இப்போது!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close