[X] Close

விஜய்யை தளபதின்னு சொல்லலாமா? - ரசிகரின் கேள்விக்கு உதயநிதி பதில்


udhaynidhi-responds-for-a-tweet-regarding-vijay

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 11:22 am
  • அ+ அ-

விஜய்யை தளபதி என்று அழைப்பது தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி பதில் அளித்திருக்கிறார்.

தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அனைவருமே ‘தளபதி’ என்ற அடைமொழியுடன் தான் அழைப்பார்கள். திமுக கூட்டங்களின் அழைப்பிதழ்கள், போஸ்டர்கள் என அனைத்திலுமே ‘தளபதி’ என்றே குறிப்பிட்டு இருக்கும். தமிழ் திரையுலகில் ‘இளைய தளபதி’ என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்துவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக பலரும் ‘தளபதி’ விஜய் என்றே அழைத்து வருகிறார்கள்.

நேற்று (அக்.3) ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவருமே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற மறைமுகமாகப் பேசினார்கள்.

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் “விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர். பார்த்து செய்யுங்க சார்” என்று உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார் ரசிகர் ஒருவர். 

இதற்கு உதயநிதி ஸ்டாலின் “ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !” என்று பதிலளித்துள்ளார். உதயநிதியின் இந்த பதில் தற்போது வைரலாக ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close