[X] Close

ஒரு மன்னன் எப்படி இருக்கனும்னா!- விஜய் சொன்ன குட்டிக்கதை


sarkar-audio-launch-vijays-short-story

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 22:40 pm
  • அ+ அ-

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் அரசியல் சார்பான சில கருத்துகளை முன்வைத்தார். சர்காரில் நான் முதல்வராக நடிக்கவில்லை. நிஜத்தில் ஒருவேளை முதல்வரானால் நான் நடிக்க மாட்டேன். முதல்வரானால் ஊழலை ஒழிக்க பாடுபடுவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய ஒருவர் ஒரு குட்டிக் கதையையும் சொன்னார்.

"ஒரு மன்னன் தனது சிப்பாய்களுடன் ஊர்வலம் சென்றார். அப்போது அவருக்கு சிப்பாய் ஒருவர் எலுமிச்சை சாறு வழங்கினார். மன்னரோ உப்பு பத்தவில்லை. உப்பு வாங்கி வரவும் என்றார். சிப்பாயோ உப்பு எதற்கு வாங்கிக்கொண்டு நான் கடைத்தெருவில் கொஞ்சம் எடுத்து வருகிறேன் என்றார்.

மன்னரோ அது கூடாது என்றார். உப்புக்கான காசைக் கொடுத்து வாங்கி வரவும் எனக் கட்டளையிட்டார். பின்னர் சிப்பாயிடம் ஒருவேளை நான் உப்பை காசு கொடுத்து வாங்காமல் எடுத்து வரச்சொன்னால் எனக்கு பின்னால் வரும் பரிவாரம் இந்த கடைத்தெருவையே காலி செய்துவிடும்" என்றார்.

மேலும் பேசும்போது, "ஒரு மன்னர் வலுவானவராக இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும்.

இங்கே ஒருவர் பிறப்புச் சான்றிதழ் வாங்கவும் இறப்புச் சான்றிதழ் வாங்கவும் லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுக்காவிட்டால் பிறந்தும் பிறக்காதவராகவும் இறந்தும் இறக்காதவராகவும் இருக்க வேண்டியுள்ளது. ஒரு மன்னன் சரியாக இருந்தால் கீழே இருக்கும் அனைவரும் சரியாக இருப்பார்கள். புழுக்கம் வந்தா மழை வர மாதிரி, அடிபட்டு வருகிறவன் கீழ் ஒரு சர்கார் வரும் பாரு. அதுதான் சர்கார்" எனப் பேசினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close