[X] Close

அண்ணன் விஜய் வேற லெவல்!- யோகிபாபு நெகிழ்ச்சி


yogibabu-on-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 21:58 pm
  • அ+ அ-

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபு, அண்ணன் விஜய் வேற லெவல் என உணர்ச்சி பூர்வமாக பேசினார்.

யோகிபாபு பேசியதாவது, "நான் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். அஜித் சாரோடையும் படம் பண்றேன். ஆனால் அண்ணன் (விஜய்) வேற லெவல்" என்றார்.

அவர் இவ்வாறு கூறவே அரங்கம் அதிர்ந்தது. அடுத்ததாக யோகிபாபு பேச முடியாத அளவுக்கு ரசிகர்கள் குரல் எழுப்பினர். விஜய் எழுந்து நின்று ரசிகர்களை நோக்கி வணங்கினார். அதன் பின்னரே ஆரவாரம் குறைந்தது.

மெர்சல் படத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் யோகிபாபு பேசினார். மெர்சலில் சமந்தா 5 ரூபா டாக்டர் யார் என்று கேட்பார். யாரு பார்க்க சூப்பரா இருப்பாங்களோ அவுங்கதான் 5 ரூபா டாக்டர்னு விஜய் சொல்வார். அதற்கு நான் அப்ப நீ கெளம்பு என்று சொல்வேன். அந்தக் காட்சியில் நடிக்க நான் தயங்கினேன். அப்போது, ஒரு ஆர்டிஸ்ட் தன்னைத் தானே குறைத்து மதிப்பிடக்கூடாது என விஜய் கோபப்பட்டார்.  இப்படி ஒரு நடிகர் இருக்கமுடியுமா? என்றார்.

விஜய் எளிமையானவர் என்றும் விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால்கூட மாஸ் ஹீரோவை கேலி செய்யும் சீனுக்கு பேக் அப் சொல்லிவிட்டு சென்றிருப்பார் என்றும் பேசினார்.

எனக்கு சோறுபோடுவது முடிதான் மூளை இல்லை என்று பிரசன்னாவின் கேள்விக்கு நறுக்கென்று பதில் சொன்னார் யோகிபாபு.

மேடையில் இருந்து இறங்கிவந்த யோகிபாபுவை நடிகர் விஜய் ஆரத் தழுவிக் கொண்டார். யோகிபாபு ஏ.ஆர்.முருகதாஸுடனும் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் கைகுலுக்கிச் சென்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close