[X] Close

இது சர்கார் தீபாவளிடா!- கீர்த்தி சுரேஷ்


keerthi-suresh-hails-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 20:53 pm
  • அ+ அ-

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நாயகி கீர்த்தி சுரேஷ் தான் கலந்து கொண்டதிலேயே இதுதான் மிகப் பெரிய இசை வெளியீட்டு விழா என மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மேலும் இது சர்கார் தீபாவளிடா என படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது குறித்து பெருமிதத்துடன் கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், "நான் தூரத்தில் இருந்து விஜய்யை ரசித்திருக்கிறேன். இப்போது பக்கத்தில் இருந்து பார்க்கிறேன். அவருடன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன்.  இரண்டு படங்கள் விஜய்யுடன் நடித்தாலும் ஷூட்டிங்கில் ஒவ்வொருநாளும் ஒரு புது மனிதரைப் பார்ப்பது போல் இருக்கும். அவரின் ஆளுமையை, பணிவை நான் ரசிக்கிறேன்.

'சர்கார்' ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது அடிடா மேளத்தை, போடுறா வெடியை என்று ட்வீட் போட்டேன். தீபாவளிக்கு படம் வெளியாகிறது. அடிடா மேளத்தை, போடுறா வெடியை என்றே இப்போதும் சொல்கிறேன். இது சர்கார் தீபாவளிடா!
கேரளாவில் போக்கிரியின் 100-வது நாள் வெற்றிவிழாவில் விஜய்யை போட்டோ எடுத்தேன். அப்போது அவரை மட்டுமே எடுத்தேன். அப்ப செஃல்பி இல்லை" என்றார்.

கீர்த்தி சுரேஷை மேடைக்கு அழைக்கும்போது தொகுப்பாளர் சிம்டாங்காரனின் சிம்டாங்காரி எனக் கூறி அழைத்தார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close