[X] Close

சிம்டாங்காரன் மீனிங் இதுதான்!- இசை வெளியீட்டு விழாவில் விளக்கிய விவேக்


simtangaran-meaning

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 20:24 pm
  • அ+ அ-

யார பார்த்தா கண் சிமிட்டாம பார்க்கத் தோனுதோ அவர்தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சிம்டாங்காரன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக், "யாரையாவது பார்த்தால் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டும் என்று தோன்றுமல்லவா அப்படிப்பட்டவர்தான் சிம்டாங்காரன்.

சிம்டாங்காரன் பாடல் வரிகள் குறித்து நான் முழு விளக்கம் தருகிறேன். இந்த மேடை, இந்த தருணம் அதற்கானது அல்ல என்பதால் பின்னர் ஒருநாள் அதை சொல்கிறேன்" எனக் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, "ஆளப்போகும் தமிழனுக்கு வாழ்த்துகள். ஒரு படைப்பாளி ஒருவர் எழுதிய கவிதை இது.
பிரம்மா நான் உன்னைவிட பெரியவன்
என் படைப்புகளுக்கு அழிவில்லை.
இவ்வாறு அந்த படைப்பாளி எழுதினான். 

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எழுதும் போதெல்லாம் நன்றியும் அச்சமும் கலந்தே இருக்கும்.

தளபதி விஜய்க்கு நான் எழுதிய கவிதைகள் எல்லாம் மிகவும் பொருத்தமானவை. ஒலிக்கும் பெயர் ஒன்று, அரங்கமே அதிரவைக்கும் என்று எழுதினேன். விஜய்யின் பெயர் சொன்னதுமே அரங்கம் அதிர்கிறது. நான் சரியாகத்தான் அவர் எழுதியிருக்கிறார்.
கரும்பு நட்டேன் விக்கலை, நெல்லு நட்டேன் விக்கலை, கல்ல நட்டேன் வித்துச்சு! விவசாயியின் குரலை ஒலிபெருக்கி போல ஊர் அறிய செய்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இவர்களுடன் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close