[X] Close

விஜய்யின் 75 வயது ரசிகர் சொன்ன வாழ்த்து!- சர்கார் விழாவில் எஸ்.ஏ.சி. நெகிழ்ச்சி


sac-on-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 20:07 pm
  • அ+ அ-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு 75 வயது ரசிகர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

ராதாரவி, வரலட்சுமி சரத்குமாரைத் தொடர்ந்து மேடை ஏறிய எஸ்.ஏ.சந்திரசேகர் படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை கீர்த்தி சுரேஷ் என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இசை வெளியீட்டு விழாவுக்காக காரில் வரும்போது தனது மனைவியின் செல்ஃபோனுக்கு 75 வயது ரசிகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுந்தகவல் ஒன்றை சுட்டிக்காட்டினார். 

மாநில சர்கார் பற்றி தெரியாது
மத்திய சர்கார் பற்றியும் எனக்குத் தெரியாது
தளபதியில் சர்கார் சூப்பர்!

என அந்த முதியவர் கூறியிருந்ததாக பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close