[X] Close

நான் தளபதி வெறியர்!- வரலட்சுமி சரத்குமார்


varalakshmi-sarathkumar-about-sarkar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 19:42 pm
  • அ+ அ-

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், "நான் ஒரு தளபதி வெறியர். இந்தப் படத்தால் எனது 4 கனவுகள் நிறைவேறிடுச்சு" என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், "இது வரைக்கும் நான் எந்த ஒரு மேடையைப் பார்த்தும் நெர்வஸ் ஆனதில்லை. ஆனால், இங்க இந்த மேடையைப் பார்த்து நான் நெர்வஸ் ஆகிவிட்டேன். 

பொதுவாக நடிக்க வருபவர்களுக்கு நிறைய கனவு இருக்கும். இந்த பேனர்ல, இவர்கூட, இவர் இசையில, இவர் இயக்கத்துல நடிக்கனும் என்றெல்லாம் கனவு இருக்கும். எனக்கு விஜய் சாருடன், ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பேனரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனது 4 கனவுகள் ஒரே படத்தில் நிறைவேறியிருக்கு. நான் தளபதியின் வெறியர். விஜய் பற்றி யாராவது பேசினால் சண்டைக்கு சென்றுவிடுவேன். அது அவருக்கே கூட தெரியும்" எனப் பேசினார்.

கீர்த்தி சுரேஷை வெகுவாக பாராட்டியதோடு அவருடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க விருப்பம் என்று கூறினார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close