[X] Close

கமலுக்கே குறும்படம்; ஓவியாவுக்குக் குவியுது லைக்ஸ்!


oviya-kamal-kurumpadam

கமல் - ஓவியா

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Oct, 2018 19:28 pm
  • அ+ அ-

பிக்பாஸ் சீசன் 2 நிறைவு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் ஓவியா. பிக்பாஸ் 1 வீட்டில் இருந்து பட்டையை கிளப்பியவர். இவரின் ரசிகர்கூட்டம், ஓவியா ஆர்மியையே உருவாக்கியது தனிப்பெருமை.

பிக்பாஸ் சீசன் 2ல் வீட்டுக்கு ஏற்கெனவே ஓவியா வந்திருந்தார். அதேபோல், நிறைவு நிகழ்ச்சியிலும் ஓவியா வந்திருந்தார். அப்போது அவரைப் பார்த்ததும் உற்சாகமானார்கள் நேயர்கள்.

அப்போது, ஓவியாவிடம் நேயர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். ஏன் இன்னும் சினிமால நடிக்கலை என்று கேட்டார்கள். கதை, கேரக்டர் எல்லாம் நல்லா வரணுமேன்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன் .நவம்பர், டிசம்பர்ல வரிசையா படங்கள் வரப்போகுது என்றார்.

இதேபோல், பல கேள்விகளைக் கேட்டார்கள் நேயர்கள். அனைத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார் ஓவியா.

பிறகு, கமலிடம் பேசினார். ‘சார், எங்களுக்கெல்லாம் பல குறும்படங்கள் போட்டிருக்கீங்க. இப்போ… உங்களுக்காக ஒரு குறும்படம் சார்’ என்று சொல்லே கமலே ரசித்துச் சிரித்தார்.

இதைக் கேட்டதும், பிக்பாஸ் அரங்கில் இருந்த நேயர்களும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வந்த பாலாஜி, நித்யா, டேனியல், சென்றாயன், ஜனனி, மும்தாஜ் முதலானோரும் செம கைத்தட்டல் செய்து வரவேற்றார்கள்.

அதன் பிறகு கமல் குறித்து போடப்பட்ட குறும்படத்துக்கு ஏக அப்ளாஸ்.

இந்த நிலையில், கமலுக்கே குறும்படம் போட்ட ஓவியா குறித்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஏகத்துக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒருவேளை… ஓவியா ஆர்மி இன்னும் ஒர்க்கிங்கில் இருக்குதோ என்னவோ?

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close