[X] Close

இது இசை வெளியீட்டு விழா அல்ல; சின்ன மக்கள் மாநாடு: ராதாரவி


radharavi-speech-on-sarkar-audio-launch

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Oct, 2018 18:54 pm
  • அ+ அ-

இது இசை வெளியீட்டு விழா அல்ல சின்ன மக்கள் மாநாடு என சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த நடிகர் ராதாரவி பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராதாரவி பேசும்போது "இப்போ நம்ம ஊர்ல சர்கார் சும்மா நடந்திட்டு இருக்குனு, @sunpictures இந்த #Sarkar எடுத்துட்டாங்க. தளபதி நீ சமுதாயத்திற்கு தேவை. இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரில. ஒரு சின்ன மக்கள் மாநாடு.

விஜய்யின் முதல் படத்தில் அவருக்கு நான் தான் தந்தையாக நடித்தேன். விஜய் பெரிய நடிகராகி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது,  ராதாரவியிடம் இருந்துதான் நடிப்பைக் கற்றுக் கொண்டேன் என நன்றியுடன் கூறியவர். இப்படி நிறைய பேர் சொல்லமாட்டங்க.
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கலாநிதி மாறன், செம்பியன் இவர்கள் அனைவருமே என் சினிமா குடும்பத்தினர். இவர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஒரு சிலரைப் பற்றி நான் சொல்லாமல் விட்டிருக்கலாம். 
சினிமாத் துறை வளரும் போது திறமைசாலிகளை அடையாளம் காண்பதில்லை. திலீப்பை நான் தான் முதல் படத்தில் புக் செய்திருக்க வேண்டும். விட்டுவிட்டேன். (ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர் திலீப்)

விஜய்யின் வளர்ச்சியைக் கண்டு ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து பெருமைப் படுகிறேன். விஜய் மட்டும்தான் யாருக்கும் தெரியாமல் சைலன் டாக உதவி செய்பவர்.

விஜய், நீ சமுதாயத்துக்கு தேவை. இதை நான் சொன்னதற்கே இவ்வளவு கை தட்டுகிறார்கள் என்றால் நீ சமுதயாத்தில் இறங்கி சேவை செய்தால் எவ்வளவு கைதட்டல் கேட்கும்" எனப் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close