[X] Close

எச்.ராஜா குறித்து விஜய்சேதுபதியின் சூசகப் பேச்சு: சுப.வீ பாராட்டு


subaveerapandian-appalause-vijaysethupathi-speech-at-96-press-meet

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 17:36 pm
  • அ+ அ-

'96' பத்திரிக்கையாளர் சந்திப்பில் எச்.ராஜா குறித்து விஜய்சேதுபதியின் சூசகமான பேச்சுக்கு சுப.வீரபாண்டியன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவியது. ரெய்டு ஏன், எதற்கு என்பதற்காக எந்தவொரு காரணமுமே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ப்ரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘96’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

இதற்கு விஜய்சேதுபதி அளித்த பதிலில், "நம்மூரில் கண்டபடி கத்தி பேசிவிட்டு, அதை நான் பேசவில்லை எனது அட்மின் பேசினாரு, மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம்” என்று குறிப்பிட்டார். முன்னதாக எச்.ராஜா உயர் நீதிமன்றம் குறித்த பேச்சை நான் பேசவில்லை என்று மறுத்தார். இதற்கு முன்னர் பெரியார் சிலை குறித்த சர்ச்சைப்பதிவை எதிர்ப்பு வந்தவுடன் நான் பதிவிடவில்லை அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று பல்டியடித்தார். இதை கிண்டல் செய்யும் தோணியிலேயே விஜய் சேதுபதி பேசினார்.

விஜய்சேதுபதியின் இந்தப் பேச்சுக்கான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுப.வீரபாண்டியன், “"பயந்த  சுபாவம்" கொண்ட விஜய்சேதுபதி யின் துணிச்சல்!” என்று தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close