[X] Close

நெகிழ்ந்து மகிழும் ரித்விகா; மீண்டும் மீண்டும் நன்றி ட்விட்!


rithvika-thanks

ரித்விகா - பிக்பாஸ் வின்னர்

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Oct, 2018 14:57 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறார் ரித்விகா. மீண்டும் மீண்டும் நன்றி என ட்வீட் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் 2 சீசனில், 106வது நாளையடுத்து நிறைவு விழா நடைபெற்றது. இறுதிக்கட்டத்தில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா இருந்தார்கள். இதில் பிக்பாஸ் 1ல் வின்னரான ஆரவ் வந்து, ஜனனியை பிக்பாஸ் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார்.

பிறகு ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் இருந்தார்கள். மறுநாள் நிறைவு நாள்; நிறைவு விழா. கமலே பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றார். அங்கே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து அரங்கத்துக்கு அழைத்து வந்தார்.

அப்போது, கமல் இந்தக் கையில் ஐஸ்வர்யாவையும் அந்தக் கையில் ரித்விகாவையும் பிடித்தபடி இருந்தார். சட்டென்று ஐஸ்வர்யாவின் கையில் முத்தம் கொடுத்துவிட்டு, ரித்விகாவின் கையை உயர்த்திப் பிடித்து, ரித்விகாவே வின்னர் என்று அறிவித்தார்.

மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ஆரவாரித்தது. ‘என் சின்ன வயசிலிருந்தே கமல் சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரோட நாயகனையும் தேவர்மகனையும் பலமுறை பாத்துருக்கேன். என் இந்த வளர்ச்சிக்கு கமல் சார் காரணம். அவருக்கு நன்றி. பிக்பாஸுக்கு நன்றி. முக்கியமா, எனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி.

பொறுமையோடயும் நிதானத்தோடயும் விளையாடினா, எப்ப வேணா, யார் வேணா ஜெயிக்கமுடியும். இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார்.

இதையடுத்து, ரித்விகாவின் பெற்றோர் மேடைக்கு வந்தார்கள். ‘உலகநாயகன் வழிநடத்திச் சென்றவிதம் எல்லோருக்குமான பாடம். அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்’ என்றார்கள்.

இதன் பிறகு, வெளியே வந்த ரித்விகா, நன்றியும் ஆதரவும் தந்த மக்களுக்கு நன்றி என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் வீடியோவாகவும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார் ரித்விகா.

தன் ட்விட்டர் பக்கத்தில், ’அனைவருக்கும் நன்றி. இதைவிட கச்சிதமான, உண்மையான அன்பை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. அன்புடன் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி மறப்பது நன்றன்று எனும் வள்ளுவரின் வாக்கை உணர்ந்த ரித்விகா, மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

நன்றி மறவாத ரித்விகா!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close