[X] Close

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழா: அரசியல் பேசுவார் விஜய்?


what-vijay-going-to-speak-at-sarkar-audio-launch

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 14:17 pm
  • அ+ அ-

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில், விஜய் என்ன பேசுவார், அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (அக்டோபர் 2) பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்களின் டிராக் லிஸ்ட் நேற்று மாலை இணையத்தில் வெளியானது. மேலும், நேற்றிரவே பாடல்கள் சமூகவலைத்தளத்தில் லீக்காகின. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கே இந்த நிலையா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது, சமூகவலைத்தளத்தில் அனைவருமே விஜய் இன்று என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்புடனே காத்திருக்கிறார்கள்.

தவறாகப் பேசுபவர்களை தவிருங்கள் என்று ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் விஜய். ஆனால் அப்படத்தின் வசனங்கள் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அது தொடர்பாக தனியார் விருது வழங்கும் விழாவில் “சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களைப் பேசினேன்” என்று தெரிவித்தார் விஜய்.

சமகால அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குபவர் விஜய். ஜல்லிக்கட்டுப் போராட்டம், பணமதிப்பு நீக்கம், அனிதா தற்கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என அனைத்திலுமே தனது பேச்சாலும், செயலாலும் அனைவரது பாராட்டையும் பெற்றார். 


தற்போது, ‘சர்கார்’ படமும் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படம் என்கிறார்கள்.  ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். 

இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரஜினி தவிர்ப்பு

’சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘ பேட்ட’ படத்திற்காக வாரணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. ஆனால், ‘சர்கார்’ படக்குழுவினருக்கு ரஜினி வீடியோ வடிவில் வாழ்த்து கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close