[X] Close

”ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுகிறார்கள்”- தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடித்த விஜய் தேவரகொண்டா


vijay-devarakonda-criticizing

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 10:54 am
  • அ+ அ-

கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோட்டா’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். தமிழக அரசியலை பற்றிய இப்படத்தில் நாசர், சத்யராஜ், மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது பல்வேறு செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்தார். இதில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டியில் “தமிழக அரசியலில் நிகழ்ந்த வேடிக்கையான நிகழ்வாக எதை பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு “உங்கள் முதலமைச்சர் மேலே ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும்போது அவரது அமைச்சர்களும், தொண்டர்களும் கீழ ரோட்டில் விழுந்து கும்பிடுவார்கள். ஹெலிகாப்டரில் செல்பவருக்கு அப்படி அது தெரியும்?

அதே போல ‘நோட்டா’ படத்திலும் காட்சிகள் உண்டு. நடிகர் நாசர் ஒரு அரசியவாதி. தனது கட்சிக்காரர்களிடம் “எப்போதும் குனிந்து கொண்டே இருக்காதீர்கள். என் முகத்தை பாருங்கள். நாளை எனக்காக சிலை வைக்கும்போது என் முகத்தை மாற்றி வைத்து விடுவீர்கள்” என்று சொல்வார். இக்காட்சி பெரும் வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close