[X] Close

பிக்பாஸால் இனி ஏற்றம்தான்! - ஐஸ்வர்யா மகிழ்ச்சி - ஆட்டம் போடும் வீடியோ வைரல்


iswarya-tweet-dance

ஐஸ்வர்யா - பிக்பாஸ்2

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Oct, 2018 10:01 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, எல்லோருக்கும் தெரிந்தவளாகவும் நிறையபேர் விரும்பிபடியும் ஆகியிருக்கிறேன். இது என் வாழ்வில் ஏற்றத்தைத் தரப்போகிறது என உணர்கிறேன் என பிக்பாஸ் ஐஸ்வர்யா, நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொல்லியிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 2ல் 16 பேர் நுழைந்தார்கள். இதில் ஒவ்வொருவராக கழன்றுகொண்டே இருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே கோபக்காரி, வீம்புக்காரி என்றெல்லாம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவர்.

யாரையும் எப்போதும் எடுத்தெறிந்து பேசுவதும் தான் பிடித்த முயலுக்கு மூணேமுக்கால் கால் (எத்தனைநாளைக்குத்தான் மூணுகால் பழமொழியையே சொல்லுவது) என்று பிடிவாதம் பிடிப்பது என்று இருந்தார் ஐஸ்வர்யா.

கோயிலில் திருவிழாவில் அருள்வந்து ஆடினால், பக்கத்திலேயே நின்றிருப்பவர்தான் அவரைப் பிடித்து, இறுக்கி, விபூதியை அடித்து சமநிலைக்குக் கொண்டுவருவார். அப்படி ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா இருந்து, கூல் பேபி என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஆனால், ஒருகட்டத்தில், ஐஸ்வர்யா நிதானத்துக்கு வந்தார். நடுவே மும்தாஜின் பக்கம் திரும்பாதவர், பிறகு அவருடன் இணைந்தார். அங்கிருந்து கிடைத்த அன்பும் யாஷிகாவிடம் இருந்து கிடைத்துக்கொண்டிருந்த அரவணைப்பும் பாலாஜியின் பிரியமும் ஐஸ்வர்யாவை, அன்புமனுஷியாக்கியது.

அப்படி இப்படி என்று எல்லோரும் வெளியேறிக்கொண்டே இருக்க, கடைசிக்கட்டத்தில், பிக்பாஸில் நீயா நானா... ஐஸ்வர்யாவா, ரித்விகாவா என்கிற நிலை வந்தது.

‘இந்த இடத்துக்கு வந்ததே போதும் எனக்கு. ஜெயிக்கணும், பரிசு வாங்கணும் என்பதெல்லாம் இல்லை. இதுவே நான் ஜெயித்தமாதிரிதான். அப்படித்தான் உணருகிறேன்’ என்றார் ஐஸூ.

இப்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தாச்சு. நிகழ்ச்சியும் நிறைவடைந்துவிட்டது., ரித்விகாவும் வின்னர் பரிசு பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில், தன் டிவிட்டர் பக்கத்தில் நீண்டநாள் கழித்து, ஐஸ்வர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘இந்த பிக்பாஸால் இனி வாழ்வில் ஏற்றம் கிடைக்கப்போகிறது என உணருகிறேன். சந்தோஷ தருணம் இது. எல்லோருக்கும் என் நன்றிகள். குறிப்பாக, தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்றி மக்களே!’ என்று பதிவிட்டுள்ளார்.

கூடவே, சந்தோஷத்தில் ஆடுவது போலான வீடியோவையும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இப்போது இந்த வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close