[X] Close

நித்யாவை நாமினேட் பண்ணவே இல்ல மும்தாஜ் மேடம் – பாலாஜி; மும்தாஜ் மேம்… மன்னிச்சிருங்க மேம் – இது மஹத்


mumtaz-balaaji-mahath

மும்தாஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Oct, 2018 18:52 pm
  • அ+ அ-

நித்யாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சினைன்னு கேட்டாங்க மும்தாஜ் மேடம். ஆனா முழுசா பிரச்சினைகளைச் சொல்லல. ஆனா, நாங்க சேரணும்னு அவங்க ரொம்பவே ஆசைப்பட்டாங்க. அதுக்காக, மும்தாஜை அவங்க நாமினேட் பண்ணவே இல்ல என்று பாலாஜி சொன்னார். அதேபோல, நான் செஞ்சது தப்புதான். மும்தாஜ் மேடம்… என்னை மன்னிச்சிருங்க மேடம் என்று நெகிழ்ந்தார் மஹத்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் யாரென்று அறிவிக்கும் நிகழ்ச்சியும் நிறைவு விழாவும் நேற்று நடந்தது. வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, மும்தாஜின் அண்ணா, நித்யாவிடம், ஏன் இவ்ளோ வெறுப்பு மும்தாஜ் மேல என்று கேட்டார். மும்தாஜ் ஆர்மி, டிவிட்டர், என் அட்மின், 150 மும்தாஜ் ஆர்மீஸை அன்பிரண்டு பண்ணிட்டேன் என்றெல்லாம் சொன்னார் நித்யா.

அப்போது பாலாஜி, ‘மும்தாஜ் மேடம், எங்கிட்ட, நீங்களும் நித்யாவும் ஏன் பிரிஞ்சீங்க, என்ன பிரச்சினைன்னு கேட்டாங்க. நான் டீடெய்லா சொல்லலை. ஓரளவுதான் சொன்னேன். நாங்க சேரணும்னு பிரார்த்தனை பண்ணுங்க மேடம்னு கேட்டுக்கிட்டேன். நாங்க ரெண்டுபேரும் சேரணும்னு அவங்களுக்கு ஆசை. உண்மையிலேயே அப்படியொரு அன்பு எல்லார்கிட்டயும் வைச்சிருக்கறவங்க, மும்தாஜ்.

இன்னொரு விஷயம்… பிக்பாஸ் வீட்ல இருக்கும்போது, எப்படியாவது பேசி, புரிஞ்சு சேரணும்னு நித்யாவை நாமினேட் செய்ற சூழல்லயும் நாமினேட் செய்யாமலயே இருந்தாங்க மும்தாஜ் மேடம்’ என்று சொன்னார் பாலாஜி.

எல்லோரும் நெக்குருகிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதேபோல, மஹத் பேசும் போது, ‘உள்ளே இருக்கும் போது நான் செஞ்சது தப்புதான். நிறைய தப்பு பண்ணிருக்கேன். குறிப்பா, மும்தாஜ் மேடம்கிட்ட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். இப்ப உணர்றேன்.

மும்தாஜ் மேடம். என்னை மன்னிச்சிருங்க மேடம்’ என்று குரல் உடைந்து சொன்னார் மஹத்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close