[X] Close

மும்தாஜ் மேல அப்படியென்ன வெறுப்பு நித்யா? – மும்தாஜ் அண்ணன் கேள்விக்கு திணறிய நித்யா


mumtaz-anna-nithya

நடிகை மும்தாஜ் அண்ணா

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Oct, 2018 18:21 pm
  • அ+ அ-

மும்தாஜ் மேல அப்படியென்ன வெறுப்பு உங்களுக்கு என்று பாலாஜியின் மனைவி நித்யாவிடம் கேட்டார் மும்தாஜின் அண்ணன். அதற்கு பதில் சொல்லமுடியாமல் ஏதேதோ சொன்னார் நித்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. பிக்பாஸ் அரங்கில், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் வந்திருந்தார்கள். அப்போது மும்தாஜின் அண்ணன் பேசினார்.

‘நான் நித்யா மேடம்கிட்ட கேள்வி கேக்கணும்’ என்றார். பிறகு கேட்டும்விட்டார்.

‘உங்களுக்கு மும்தாஜ் மேல அப்படியென்ன கோபம். எப்போதுமே அவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தீங்க. நடுவுல பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்தபோதும் அவங்களை கார்னர் பண்ணித்தான் பேசினீங்க. ஏன்… என்ன காரணம். எதனால மும்தாஜ் மேல இப்படி வெறுப்பு’ என்று கேட்டார்.

‘மும்தாஜ் ரொம்பத் தப்பாப் பேசினாங்க. மும்தாஜ் ஆர்மின்னு ஒண்ணு இருக்கு. அதுல என்னை தப்புத்தப்பா எழுதினாங்க’ என்று நித்யா சொன்னார்.

உடனே மும்தாஜின் அண்ணன், ‘நீங்க எழுதியிருந்ததையும் பாத்தேன். அதுல இன்னும் கேவலமான முறைல மும்தாஜை எழுதிருந்தீங்க’ என்றார். ‘அது என்னோட அட்மின் கமெண்ட் போட்டது (அட… நித்யாவுக்கும் அட்மினா?). அவங்கதான் இதெல்லாம் பாத்துட்டுச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு மும்தாஜ் ஆர்மிலேருந்து 150 பேரை அன்பிரண்ட் பண்ணிட்டேன்’ என்றார் நித்யா.

உடனே மும்தாஜின் அண்ணா, ரொம்ப கூலாகச் சொன்னார்… ‘மேடம், இன்னும் நான் கேட்டகேள்விக்கு பதிலே சொல்லலை’ என்றார்.

‘எங்க பர்சனல் விஷயத்துல தலையிட்டாங்க’ என்று நித்யா சொன்னார். உடனே மும்தாஜ் இடைமறித்து, ‘உங்க பர்சனல் விஷயத்தை வெளில தெரியறமாதிரி கொண்டு வந்தது நீங்கதானே நித்யா’ என்றார். அதற்கு எல்லோரும் கைத்தட்டினார்கள்.

‘பாலாஜிகிட்ட பேசிட்டிருக்கும் போது, அவர், எங்களைச் சேத்துவையுங்கன்னு சொன்னார்’ என மும்தாஜ் சொல்ல, உடனே பக்கத்திலிருந்த பாலாஜியிடம், ‘நீங்க சொன்னீங்களா?’ என்று கேட்டார் நித்யா.

மைக்கை வாங்கிய பாலாஜி, ‘மும்தாஜ் மேடம் எங்கிட்ட  ஏன் பிரிஞ்சீங்க, என்ன பிரச்சினைன்னு கேட்டாங்க. நான் முழுசாச் சொல்லலை. ஆனா பிரிஞ்சது வருத்தம்னு சொன்னேன். நாங்க சேரணும்னு பிரார்த்தனை பண்ணுங்க மேடம்னு கேட்டுக்கிட்டேன். நானும் நித்யாவும் சேரணும்னு அவ்ளோ விரும்பினாங்க மும்தாஜ்’ என்று பாலாஜி சொல்லிமுடிக்க, அரங்கில் இருந்த அனைவரும் பலத்த கரவொலியை எழுப்பினார்கள்.

கமலும் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனா நித்யா மேடம்… மும்தாஜ் மேல அப்படியென்ன வெறுப்புங்கற கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே நித்யா மேடம்?

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close