[X] Close

எலியுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் மான்ஸ்டர்


sjsuryah-next-film-titled-as-monster

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 18:15 pm
  • அ+ அ-

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கியவர் நெல்சன். அப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார்.

'மாயா', ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. நாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு ‘மான்ஸ்டர்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதன் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. இதன் கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் டீஸரை ஒன்றை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close