[X] Close

அமலாபாலுடன் நடித்து வரும் பிஜிலி ரமேஷ்


bijili-ramesh-acting-with-amalapaul-in-aadai

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 18:09 pm
  • அ+ அ-

அமலாபால் நடித்து வரும் ‘ஆடை’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிஜிலி ரமேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் சில வீடியோக்கள் வைரலாகி, அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் சமீபத்திய வைரல் என்றால் பிஜிலி ரமேஷ். அவரது வீடியோ மற்றும் பேச்சு பெரும் வைரலாகவும், யூ-டியூப் பக்கத்தில் ட்ரெண்ட்டாகவும் ஆனது.

நயன்தாரா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் விளம்பரப்பாடலில் பிஜிலி ரமேஷ் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சில பெயரிடப்படாத படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘மேயாத மான்’ இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிஜிலி ரமேஷும் நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை கடந்த 10 நாட்களாக காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு.

’ஆடை’ படத்தின் போஸ்டர் வழியாக பெரும் எதிர்பார்ப்பை சமூகவலைத்தளம் மூலமாக உருவாக்கியுள்ளது படக்குழு. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close