[X] Close

மலையாள பிக்பாஸ் வெற்றியாளர் சாபுமோன்


big-boss-malayalam-winner-sabumon

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Oct, 2018 12:36 pm
  • அ+ அ-

தமிழைப் போல் பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் , சாபுமோன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஏசியாநெட் தொலைக்காட்சியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கடந்த ஜூன் 24-ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
ஆரம்பத்தில்16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்தனர். இறுதியாக 5 போட்டியாளர்கள் மட்டும் ஃபைனல் ரவுண்டில் இருந்தனர். ஸ்ரீனிஷ் அர்விந்த், பியர்ல் மானே, சாபுமோன், அரிஸ்டோ சுரேஷ், சியாஸ் கரீம் ஆகிய ஐந்து போட்டியாளர்களிடம் கடும் போட்டி நிலவியது. 

இவர்களில் ஸ்ரீனிஷ் அர்விந்த், அரிஸ்டோ சுரேஷ், சியாஸ் கரீம் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  அரிஸ்டோ சுரேஷுக்கு சினிமா வாய்ப்பு கிட்டியுள்ளது.

பியர்ல் மானே, சாபுமோன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவந்த சூழலில் அதிக வாக்குகளைப் பெற்று சாபுமோன் பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அவருக்கு பிக்பாஸ் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் பிரபல இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவஸியின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை மோலிவுட் ஸ்டார் மோகன்லால் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close