[X] Close

ரித்விகா வெற்றி! - பிக் பாஸ் 1 - 2 போட்டியாளர்கள் நினைப்பது என்ன?


bigg-boss-contestants-congrats-rythvika

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 12:02 pm
  • அ+ அ-

விஜய் டிவில் 107 நாட்களாக ஒளிபரப்பப் பட்ட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றோடு நிறைவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, பாலாஜி, நித்யா உள்ளிட்ட 16 பேர்களுடன் பிக் பாஸ் சீசன் 2 தொடங்கியது. 

107 நாட்களை கடந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் ரித்விகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்களும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ரித்விகாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அவற்றின் தொகுப்பு:

கணேஷ் வெங்கட்ராமன்: பிக் பாஸ் சீசன் 2வில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வாழ்த்துக்கள்.. அனைத்து போட்டியாளர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் எனது வாழ்த்துக்கள்

காயத்ரி ரகுராம்: வெற்றியாளர் ரித்விகாவுக்கு வாழ்த்துக்கள். நீதான் வெற்றி பெறப்போகிறாய் என்று எனக்கு முதல் நாளே தெரியும். ஏதோ ஒரு இடத்தில் எனக்கு தோன்றியது. இதற்கு முன் உன்னை நான் சந்தித்ததில்லை. ஆனால் நீ மக்களின் மனதில் இடம்பெற்றுவிட்டாய்

ஆர்த்தி: வெற்றி பெற்ற ரித்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... பிக்பாஸ் சீசன் 2வின் இந்த வெற்றி  சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சாதிக்க நினைக்கும்பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் அமையும்.. ஆசீர்வாதங்கள் தொடரட்டும்

ஹரிஷ் கல்யாண்: வாழ்த்துக்கள் ரித்விகா. இந்த மேடை ரித்விகாவுக்கு மட்டுமானது இல்லை. இது அனைவருக்குமானது. நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வெற்றியாளர்கள்தான். அவர்களுக்கு ஆதரவாக இருந்த மற்ற போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் எனது அன்பு

ஆரவ்: கடந்த வருடம் இதே நாள் உங்கள் பேரன்பையும் ஆதரவையும் அளித்து எனக்கு இந்த வாழ்க்கையை அளித்தீர்கள். உங்களில் ஒருவனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கொடுத்த வாழ்க்கை என்றும் உங்களுக்காகவே. நன்றிகள் பல கூறினாலும் அது மிகையாகாது. புதிய வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close