[X] Close

சமீபகால நிகழ்வுகளே 'பரியேறும் பெருமாள்' : வைரலாகும் மாணவியின் கடிதம்


catherine-letter-about-pariyerum-perumal

  • kamadenu
  • Posted: 01 Oct, 2018 10:32 am
  • அ+ அ-

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோருடன் பல்வேறு புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை விமர்சகர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விமர்சனத்துக்கு ஏற்றவாறு வசூல் இருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர். இதற்கான காரணம், போதிய திரையரங்குகள் கிடைக்காததும் ஒரு காரணம். பல்வேறு மல்டி ப்ளக்ஸில் ஒரு காட்சி மட்டுமே ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

’பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பல்வேறு ரசிகர்களும், தங்களுடைய கருத்துகளை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் கேத்ரின் என்ற மாணவி இப்படம் குறித்து எழுதியிருக்கும் கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அக்கடிதத்தில் கேத்ரின் கூறியிருப்பதாவது:

JNU, VIT, IIT, AIIMS, AU, NITல படிக்கிற பசங்க  கூட எப்படி தற்கொலை பண்ணிக்குறாங்க? (Helpless Tamilnadu Students) 

நல்ல பையன் மகள் ஆசைப்படுறா.. ஆனா கொன்னுடுவாங்களேப்பா.. (Helpless fathers)

நான் ஜாதி பாத்தாடா பழகுறேன்? (Helpless Friends) 

நான் ஏன் நினைச்சத பேச முடியல? (Helpless Victims)

12 வருஷம் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறேன்.. ஏன் இங்கிலீஷ் வரமாட்டேங்குது? (Helpless TN Students)

கோகுல்ராஜ், வெமுலா, இளவரசன், பிரனாய், சங்கர், அனைவரும் திரையில் கருப்பியாய்

Urine - துப்பாக்கியை விட கொடிய ஆயுதம் (Helpless Victims)

பெத்தவங்க பிள்ளைகளை கௌரவ கொலை பண்ணிட்டு அபிராமிய திட்டுறாங்க (helpless Parents)

எல்லாரும் Helpless இல்லைங்க; 15% ஜாதி அரசியல், பெரியவங்க செய்றதுதாங்க இதெல்லாம்; வயதானவர்கள் ஜாதிய சொல்லி தராங்க (Helpless Elders)

“படம் பார்த்து அழக்கூடாது என்றிருந்தேன்; ஆனாலும் கதறி அழுதேன்” 

climax மெய்மறந்து பார்த்த பொழுது (கைதட்ட மறந்த பொழுது) ஒரு மாற்றம் விரும்பும் இளைஞன் கைதட்டினான் - அரங்கம் முழுதும் ஒலி பற்றிக் கொண்டது. 

நன்றி மாரி செல்வராஜ் அண்ணா. உங்களின் 200வது படத்திற்கு; முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

- மாற்றம் விரும்பும்,

கேத்ரின் M.E, MBA, M.Sc, Phd 

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close