[X] Close

ரித்விகாவுக்கு வாழ்த்துகள்! விஜி கணவர் டிவீட்


feroz-biggboss2-twitt

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 22:21 pm
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா மூவரில் ரித்விகாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் போட்டிருக்கிறார்  விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ்.

ரித்விகா வெற்றிக்கு வாழ்த்துகள். குறுகிய காலமே இருந்தாலும் விஜயலட்சுமிக்கும் வாழ்த்துகள். இனிமேல் பிக்பாஸ் சம்பந்தப்பட்ட ட்வீட்டுகள் என் பக்கத்தில் இடம்பெறாது. நன்றி என்று விஜயலட்சுமியின்  கணவர் டிவீட் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. அதில், ஆரவ் வீட்டுக்குள் வந்து ரித்விகாவை அழைத்துச் செல்வது போல் காட்டப்பட்டது. அதன்படி, ஆரவ் வீட்டுக்கு வந்து, அவர்களுடன் உரையாடினார். . என்ன… எல்லாருக்கும் பயம் முகத்துல தெரியுது என்றார். எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று பில்டப்பு கொடுத்தார்.

ஏற்கெனவே ரித்விகாதான் வின்னர் என்று நேயர்களால் பேசப்பட்டு வந்த நிலையில், ரித்விகாவை கைப்பிடித்து பிக்பாஸ் வாசல் வரை போவது போல் ப்ரோமா வெளியிட்டிந்தார்கள் அல்லவா பிக்பாஸ். ஆனால், ஆரவ், விஜயலட்சுமியைத்தான் அழைத்துச் சென்றார். இது ப்ரமோஷன் சஸ்பென்ஸ்.  

அதன்படி, விஜயலட்சுமியை ஆரவ் வெளியேற்றி அழைத்துச் சென்றார். கமலிடம் வந்து, விஜயலட்சுமி நெகிழ்ந்து பேசினார்.

இப்போது ரித்விகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பைனல். பிக்பாஸ் 1ல் ஆரவ்வும் சினேகனும் நின்றார்கள். ஆரவ் வென்றார். அதேபோல ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் இறுதிச் சுற்றில் நின்றார்கள். இதில் ரித்விகா வின்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று நேயர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் ரித்விகாவுக்கு வாழ்த்து தெரிவித்து விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ரித்விகா வெற்றிக்கு வாழ்த்துகள். குறுகிய காலமே இருந்தாலும் விஜயலட்சுமிக்கும் வாழ்த்துகள். இனிமேல் பிக்பாஸ் சம்பந்தப்பட்ட ட்வீட்டுகள் என் பக்கத்தில் இடம்பெறாது. நன்றி என்று விஜயலட்சுமியின்  கணவர் டிவீட் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close