[X] Close

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கமல்


biggboss2-kamal

பிக்பாஸ் கமல்

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 20:31 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடத்தினார். இதையடுத்து பிக்பாஸ் 3ல் அவர் பங்குகொள்வாரா, பங்குகொள்ளமாட்டார் என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன.

பிக்பாஸ் சீசன் 1 நடந்துகொண்டிருக்கும் போதே, கமல் அரசியலுக்குள் வந்துவிட்டார். அவரின் ட்விட்டுகள் சரவெடி கொளுத்திப் போட்டுக்கொண்டே இருந்தன. மக்கள் நீதி மய்யம் என்று கட்சியைத் தொடங்கினார். தொடங்கிய வேகத்திலேயே அடுத்தடுத்த அரசியல் பணிகளில் ஈடுபட்டார். இன்னும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், விஸ்வரூபம் 2 ரிலீஸ் செய்தார். இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். இந்தியன் 2ல் அரசியல் அவலங்களையும் அட்டூழியங்களையும் இந்தியன் தாத்தா மூலம் சொல்லிவிட்டு, அப்படியே தேர்தலைச் சந்திப்பார் என்று பேச்சு அடிபட்டது.

கமலே கூட, சினிமாவில் இருந்து ஒதுங்கி, முழுநேர அரசியலில் பணிபுரிவேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ணமாட்டார். சினிமாவை விட்டும் இந்த நிகழ்ச்சியை விட்டும் ஒதுங்கிவிடுவார். அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.

இதோ… இன்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், எடுத்ததுமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் கேள்வியே ‘சார், பிக்பாஸ் 2 சீசன் முடிந்துவிட்டது.பிக்பாஸ் சீசன் 3ல் நீங்கள் பங்கெடுப்பீர்களா சார்?’ என்று ஒரு நேயர் கேட்டார்.

உடனே கமல், ‘பங்கெடுக்கலாமா, வேணாமா’ என்று அந்த நேயரிடம் கேட்டார். ‘நீங்கதான் சார் பிக்பாஸ் 3 பண்ணனும்’ என்று அந்த நேயர் சொல்ல, எல்லோரும் கைத்தட்டினார்கள்.

அப்போது கமல், ‘அவ்ளோதானே. பண்ணிட்டாப் போச்சு’ என்றார். அவ்வளவுதான்… இன்னும் பலத்த கரவொலி எழுந்து, அடங்க நேரமாகியது.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close