[X] Close

பிக்பாஸ்: சார்… ஓவியா வர்றாங்க சார்!


biggboss2-oviya

பிக்பாஸ் ஓவியா

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 20:09 pm
  • அ+ அ-

பிக்பாஸ் சீசன் 2 நிறைவு நிகழ்ச்சியில் ஓவியாவும் வந்து கலந்துகொள்கிறார்.

பிக்பாஸ் 1 முடிந்து சில மாதங்கள் கழித்து, பிக்பாஸ் 2 சீசன் தொடங்கியது. நூறு நாட்களுக்கு பதிலாக இன்னுமொரு ஐந்துநாள் கூடுதலாக நடந்து இன்றுடன் முடிகிறது.

பிக்பாஸ் 1ல் ஆரவ் ஜெயித்து வின்னர் பரிசைத் தட்டிச் சென்றாலும் நிஜ வின்னர் ஓவியாதான். அவரால் ஈர்க்கப்பட்டு, ஓவியா ஆர்மியே உருவானதெல்லாம் தனி எபிசோடு.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் கூட அன்று தொடங்கி, இன்று வரை ஓவியா க்ரேஸ் டாப்கியரில் எகிறிக்கொண்டே இருக்கிறது. அதுதான் ஓவியா பெற்றிருக்கும் ரசிகக்கூட்ட வின்னர் பரிசு.

பிக்பாஸ் 2 சீசனில் கூட, ஓவியா வந்து பேசிவிட்டுச் சென்றார்.

அவ்வளவு ஏன்… பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா பேபிகட்டிங் வெட்டிக்கொண்டார் அல்லவா. அப்போது ஐஸ்வர்யா பேசியதும் நடந்துகொண்டதும் இன்னும் சொல்லப்போனால், ந…ட…ந்…து கொண்டதும் பார்த்துவிட்டு, பெரிய ஓவியான்னு நினைப்பா என்று எகிறினார்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள்.

இப்போது, பிக்பாஸ் 2 சீசனின் நிறைவு நிகழ்ச்சியில், பிக்பாஸ் 1 வின்னர் ஆரவ்வும் வருகிறார். முக்கியமாக, ஓவியாவும் வருகிறார்.

ஓவியா சொல்லும் தேங்க்யூவையும் ஓ...காட் என்பதையும் கேட்டுப் பாருங்கள். அத்தனை ஆழமாகவும் அழகாகவும் சொல்லுவார் ஓவியா.  

 

   

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close