[X] Close

ஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம்? ;  ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்பென்ஸ்!


aarav-viji

பிக்பாஸ் விஜயலட்சுமி

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 19:53 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 1ல் வென்ற ஆரவ், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர், பிக்பாஸ்2 சீசன் வீட்டில் உள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய மூவரில் ரித்விகாவை அழைத்துச்செல்வதாக், அதாவது வீட்டில் இருந்து வெளியேற்றுவதாக இன்றைய ப்ரோமோக்களில் ஒன்றாக வந்துள்ளது.

உண்மையில், ஆரவ் வீட்டுக்கு வந்து, அவர்களுடன் உரையாடுகிறார். என்ன… எல்லாருக்கும் பயம் முகத்துல தெரியுது என்கிறார். எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று பில்டப்பு கொடுக்கிறார்.

ஏற்கெனவே ரித்விகாதான் வின்னர் என்று நேயர்களால் பேசப்பட்டு வரும் நிலையில், ரித்விகாவை கைப்பிடித்து பிக்பாஸ் வாசல் வரை போவது போல் ப்ரோமா வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ்.

ஆனால், ஆரவ், விஜயலட்சுமியைத்தான் அழைத்துச் சென்றார். இது ப்ரமோஷன் சஸ்பென்ஸ் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அதன்படி, விஜயலட்சுமியை ஆரவ் வெளியேற்றி அழைத்துச் செல்கிறார். ரித்விகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பைனல். பிக்பாஸ் 1ல் ஆரவ்வும் சினேகனும் நின்றார்கள். ஆரவ் வென்றார். அதேபோல ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் இறுதிச் சுற்றில் நிற்கிறார்கள். இதில் ரித்விகா வின்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று நேயர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஓட்டுப் போட்டவர்களுக்கு இது கூட தெரியாதா?

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close