[X] Close

பிக்பாஸ் பைனல்… டிஆர்பி… போட்டிக்கு தனுஷ் படம்?


biggboss-drp-dhanush

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Sep, 2018 19:20 pm
  • அ+ அ-

பிக்பாஸ் 2 சீசனின் இறுதி நிகழ்ச்சி. நல்லாருக்கோ நல்லா இல்லையோ… பிக்பாஸ்க்கு பெரிய ரசிகர்கூட்டம் உண்டென்பதை மறுக்கமுடியாது.

அதிலும் குறிப்பாக, நூறு நாள் கடந்து, இன்னொரு ஐந்துநாளும் சேர்ந்து நடந்த பிக்பாஸ் 2 சீசனின் வின்னர் யார் என்பதைச் சொல்லும் நிறைவு நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது.

சேனல்னா புரோகிராம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் அதற்குள் ப்ரைம் டைம், டிஆர்பி ரேட்டிங் என சேனல்களுக்குள் நடக்கிற யுத்தம் தனிக்கதை.

வேறொரு சேனலை ஒட்டுமொத்தமாகப் பார்க்கிற போது, இங்கே மற்ற சேனல்களின் டைமிங், டிஆர்பி ரேட்டிங் எல்லாம் சர்ருன்னு குறைந்துவிடும்.

இப்படியான போட்டியில், நேயர்களுக்கு அல்வா அல்வாவாக நிகழ்ச்சிகள் கிடைக்கலாம். சில சமயம் தலையில் அடித்துக் கொள்ளும்படியாகவும் நிகழ்ச்சிகள் அமைந்துவிடும்.

இப்படித்தான், கிராமம் என்ற பெயரில், ஒரு நிகழ்ச்சி. கவர்ச்சியின் உச்சம். ஆபாசத்தின் எல்லையற்ற நிலை என்று புலம்புகிறார்கள் நேயர்கள்.

அவ்வளவு ஏன்… இரண்டுவாரங்களுக்கு முன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில், வேறொரு பிரபல சேனல் ஒன்று, தன் பக்கம் நேயர்களை இழுப்பதற்காக, மிகப்பெரிய இசையமைப்பாளர் வெளிநாட்டில் நடத்திய இசை நிகழ்ச்சியை இரண்டு வாரமாக ஒளிபரப்பியது.

இப்படியான நிலையில், இப்போது, இன்று இரவு 8 மணி முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ஏராளமான நேயர்கள் பார்ப்பார்கள் என்று கணித்த வேறொரு சேனல், இன்று மாலையில் இருந்தே நேயர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.

மாலையில் தொடங்கி இரவு 9 மணி வரை ராகவா லாரன்ஸ் நடித்த பேய்ப்படம் ஒளிபரப்பாகிறது. அதன் பிறகு 9.30 மணிக்கு தனுஷ் நடித்த படம் ஒளிபரப்பாகிறது. இத்தனைக்கும் இந்த நேரத்திலெல்லாம் அந்தச் சேனல் படமெல்லாம் ஒளிபரப்பியதே இல்லை என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close